புதுவையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக ரசாயன கலப்பின்றி விநாயகர் சிலைகள் தயாராகி வருவதாகவும் ஒரு சிலையின் விலை அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை இருப்பதாகவும், இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான எண்ணிக்கையில் விநாயகர் சிலைகள் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டமொபர் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வீட்டில் வணங்கும் சிறிய வகை விநாயகர் சிலைகள் முதல் தெருக்களில் வைத்து வணங்கும் பெரிய சிலைகள் வரை தயாராகி வருகின்றன. புதுவையில் கூனிமுக்கு என்ற கிராமத்தில் பல தலைமுறைகளாக விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கு தான் விநாயகர் சிலைக்கு ஆர்டர்கள் குவிந்து வருகிறாது.
ரசாயனங்கள் இல்லாமல் மரவள்ளிக் கிழங்கு மாவு, காகிதக் கூழ் ஆகியவற்றைக் கொண்டு இந்த விநாயகர் சிலைகள் ஒரு அடி முதல் 13 அடி உயரம் வரை தயாரிக்கப்படுவதாகவும் கடந்த சில மாதங்களாக சிலை தயாரிப்பு பணி நடைபெற்று வருவதாகவும், சிலையின் உயரம் தரம் ஆகியவற்றை பொருத்து 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.