சென்னையில் இ-சிகரெட் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசால் இ-சிகரெட் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில் இ-சிகரெட் விற்பனை குறித்து போலீசார் கண்காணிப்பில் இருந்தனர்.
இந்நிலையில் ஆர்கே நகர் நெடுஞ்சாலையில் முகமது ஜப்ருல்லா என்பவர் இ-சிகரெட் விற்பனை செய்து வருவதாக தெரிய வந்தது. இதனை அடுத்து அவரும் அவருடைய கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 476 இ-சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இ-சிகரெட் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி இ-சிகரெட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.