Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பேனருக்கு தீ வைப்பு: அதிர்ச்சி தகவல்

Advertiesment
dmdk
, வெள்ளி, 6 மே 2022 (11:59 IST)
தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பேனருக்கு தீ வைப்பு: அதிர்ச்சி தகவல்
சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பேனருக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே தேமுதிக தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் பேனர் மற்றும் தண்ணீர் பந்தலுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
 
இதனையடுத்து தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர் 
 
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விஜயகாந்த் பேனருக்கு தீ வைத்த மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பன்றி இதயம் பொருத்தப்பட்டவருக்கு புதிய வைரஸ் தொற்று! – அமெரிக்காவில் அதிர்ச்சி!