Publish Date: Wed, 27 Apr 2022 (18:48 IST)
Updated Date: Wed, 27 Apr 2022 (18:49 IST)
அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதி இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்
அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதியின்மை மருத்துவ பற்றாக்குறை நீடிக்கிறது என்றும் இவற்றை தடுக்க முதலமைச்சரின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தீ விபத்து குறித்து அவர் மேலும் கூறியபோது, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது சற்று நிம்மதி அடைந்தேன்.
ஆனாலும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட காரணமாக இருந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு மாறும் அரசுக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறி உள்ளார்