செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நல்ல பயன்களுடன் சேர்த்து, ஆபத்தான பக்கவிளைவுகளையும் உருவாக்கி வருகிறது. இந்தியா டுடே ஆய்வில் Instagram, YouTube போன்ற தளங்களில் பெருமளவில் AI மூலம் ஆபாச வீடியோக்கள் பரவி வருகின்றன. சில நிமிடங்களிலேயே இவ்வீடியோக்கள் பெறும் பார்வைகள் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வில், 20-க்கும் மேற்பட்ட Instagram மற்றும் YouTube கணக்குகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் பெரும்பாலானவை பாலியல் காட்சிகள், ஆபாச பேச்சுக்கள், மர்ம உறுப்புகள் குறித்த விவரங்கள் போன்றவற்றை கொண்டிருந்தன. மேலும், வீடியோக்களில் தோன்றும் AI கதாபாத்திரங்கள் இடையே பெரிய வயது வேறுபாடு காணப்பட்டது. அதாவது ஒரு பக்கம் 20 வயது இளைஞர், மறுபக்கம் 70 வயது பெண் என காட்டப்பட்டது.
மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவெனில், பள்ளி மாணவிகள் மற்றும் கூட குழந்தைகளின் உருவங்களையும் AI பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். சில வீடியோக்களில் குழந்தைகளே பாலியல் வசனங்கள் பேசும் படி உருவாக்கப்பட்டிருந்தன.
இந்த சூழல், AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு எவ்வளவு ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதையும், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்புவதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.