தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கும் ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கும் இடையே மட்டுமே முக்கிய போட்டி இருக்கும் என்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவித்தார்.
சுமார் 2,000 பேர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் விஜய்க்கு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. அரசை சாடிய விஜய், தனக்கு பிரசார இடங்கள் கிடைப்பதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக விமர்சித்தார். "தி.மு.க.வின் கபட நாடகம் உச்ச நீதிமன்றத்தில் அம்பலமானது. கரூர் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிநபர் ஆணையத்தின் மீதான அதிகாரிகளின் செயல்பாடு ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"2026-ஆம் ஆண்டில் தி.மு.க.வை எதிர்த்து போட்டியிடப் போவது த.வெ.க. மட்டும்தான்; 100% வெற்றி நமக்கே!" என்று கூறி தனது அரசியல் இலக்கை விஜய் உறுதிப்படுத்தினார்.