நிதி ஒதுக்கீடு செய்தும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை: தவெக தலைவர் விஜய்..

Mahendran
புதன், 3 டிசம்பர் 2025 (12:26 IST)
நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
 
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்த துயரத்திற்கு காரணம். 
 
பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்கு தேவையான உதவிகளை பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழக தோழர்களை கேட்டுக்கொள்கிறேன். 
 
மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாக பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழை காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம்: திடீரென பின்வாங்கிய மத்திய அரசு.. புதிய உத்தரவு..!

HR88B8888' என்ற நம்பர் பிளேட்டை அதிக தொகைக்கு ஏலம் கேட்டவர் வீட்டில் ஐடி ரெய்டா?

4 ஆயிரம் கோடி எங்க போச்சி?.. மக்கள் மேல அக்கறை இருக்கா?!.. பொங்கிய விஜய்..

திமுகவுக்கு தாவிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!...

இந்தமுறை அதிக தொகுதி!.. காங்கிரஸ் போடும் ஸ்கெட்ச்!.. சமாளிக்குமா திமுக?!...

அடுத்த கட்டுரையில்
Show comments