Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

Advertiesment
விஜய்

Bala

, செவ்வாய், 2 டிசம்பர் 2025 (17:06 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அவரை காண 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ கூடிவிட்டதில் அங்கே கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் காவல்துறை மீதும் கழங்கத்தை ஏற்படுத்தியது. 
ஒருபக்கம் திமுக ஆதரவாளர்கள் விஜயையும் தவெக நிர்வாகிகளும் கடுமையாக விமர்சித்தனர். இதன் காரணமாக தவெக ஒரு மாத காலம் முடங்கி கிடந்தது.
 
தற்போது அந்தக் கட்சி அதிலிருந்து மீண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 5ம் தேதி சேலத்தில் மக்களை சந்திக்க விஜய் முடிவெடுத்தார். ஆனால் தமிழக காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. எனவே அதே தேதியில் புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டார் விஜய். எனவே, 
அதற்கான அனுமதி கேட்டு கடந்த சில நாட்களாகவே புஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் புதுச்சேரி காவல்துறை அதிகாரியிடம் பேசி வந்தனர். ஆனால், போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.
 
விஜய் புதுச்சேரிக்கு சென்றால் விழுப்புரம், கடலூர் போன்ற ஊர்களிலிருந்தும் அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விடுவார்கள். அதைத்தொடர்ந்து கரூரில் நடந்தது போன்ற சம்பவம் புதுச்சேரியிலும் நடந்துவிட்டால் என்னாவது என போலீசார் யோசித்ததாக தெரிகிறது.   
 
இந்நிலையில், இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி ஐஜி மற்றும் டிஜிபி ஆகியவரிடம் இதுபற்றி ஆலோசனை நடத்தினார். முடிவில் விஜயின் ரோட் ஷோவுக்கு அனுமதி கொடுக்க முடியாது.. பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என காவல்துறை அறிவித்திருக்கிறது. 
புதுச்சேரி காவல்துறையின் இந்த முடிவு தவெகவினருக்கு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!