Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரில் உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு ரூ.20 லட்சம் அனுப்பிய விஜய்.. விரைவில் சந்திப்போம் என கடிதம்..!

Advertiesment
கரூர்

Siva

, ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (07:30 IST)
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சார்பில் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
அதன்படி, 39 பேரின் குடும்பங்களுக்குச் சேர வேண்டிய ரூ.20 லட்சம் நிதி, அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிதியுதவி விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 
கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்த சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.
 
சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தை பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்.
 
இதனிடையே, நாம் ஏற்கனவே (28.9.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாக தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவி கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
 
இறைவன் அருளுடன் இந்த கடினமான தருணத்தை கடந்து வருவோம்".
 
இவ்வாறு விஜய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாயுடன் நண்பன் கள்ளத்தொடர்பு.. மகன் செய்த விபரீத செயலால் அதிர்ச்சி.!