தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் சுற்றுப்பயணம், டிசம்பர் வரை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அது பிப்ரவரி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜயின் சுற்றுப்பயணம் தொடர்பாக புதிய நீட்டிக்கப்பட்ட தேதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்ட அட்டவணை வெளியாகியுள்ளது. இதில், டிசம்பர் வரை பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 23-ஆம் தேதி வரை பயணத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 20 நாட்கள் சுற்றுப்பயணத்தில் 18 நாட்கள் சனிக்கிழமைகளிலும், இரண்டு நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விஜய் மக்களை சந்திக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணத் திட்டத்தில் ஒரு நாளைக்கு மூன்று மாவட்டங்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பயண நேரத்தின் தாமதம் காரணமாக, ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.