தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரியில் தனது முதல் பிரசார கூட்டத்தில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியையோ அல்லது முதலமைச்சர் என். ரங்கசாமியையோ நேரடியாக விமர்சிக்காமல் தவிர்த்தது அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஏற்கெனவே தி.மு.க.வை அரசியல் எதிரியாகவும், பா.ஜ.க.வை கொள்கை எதிரியாகவும் அறிவித்துள்ளார். அவர் ரங்கசாமியுடன் நெருங்கிய உறவை பேணுபவராக கருதப்படும் நிலையில், பிரசாரத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
புதுச்சேரியின் முக்கிய பிரச்சினைகளுக்காக மத்திய பா.ஜ.க. அரசின் மீது மட்டுமே அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த மென்மையான அணுகுமுறை, வருகின்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸும் த.வெ.க.வும் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.