முதலில் ஹச். ராஜா, தமிழிசை, பொன்னார், எஸ். வி சேகர் அனைவருக்கும் நன்றி. நடிகர் விஜய்யையும் அவரது மெர்ச்சலையும் அகில இந்திய அளவிலான விவாதத்திற்கு எடுத்து சென்றதற்கு.
மெர்சல் திரைப்படத்தில் வரும் GST, Digital India சம்பந்தப்பட்ட வசனம், மருத்துவம் அதன் அதிகப் படியான விலையும், எல்லா பக்கமும் கொண்டு சேர்க்கப்பட்டு இருக்கிறது.
சென்னையை பெரும் வெள்ளம் தாக்கிய போது பேசாத வட இந்திய ஊடகங்கள், தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்பட்டப் போது பேசாத இந்த மௌனி, வட இந்திய ஊடகங்கள் நடிகர் விஜய்யையும் அவரது மெர்ச்சலையும் மெர்ச்சல் ஆக்கி கொண்டு இருக்கிறார்கள்.
ஹச். ராஜா அவர்களே! நீங்கள் சொல்லி தான் ஜோசப் விஜய் என்று எங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அவர் ஒரு கலைஞர். நாங்கள் கலையை கலையாக மட்டும் பார்க்கிறோம். திரையில் வருவது அப்துல்லாஹ் விஜயா? ஜோசப் விஜயா என்று பார்ப்பது இல்லை. ஏன் எனில் நாங்கள் தமிழர்கள். அது எங்கள் குணம்.
நாங்கள் அறிவுயுடையவர்கள்!
காதுகள் உடையவர்கள்!
மனம் உடையவர்கள்!
காது நீளும் வாய் உடையவர்கள்!
மொத்தத்தில் ஆன்டி இந்தியன்கள்!
சர்மாக்கள் அல்ல !
புதிய இந்தியாவை கொண்டு வருவோம் என சொல்லிச் சொல்லியே மக்களை முட்டுச் சந்தில் நிற்க வைத்து விட்டது பாஜக. இதைத்தான் மெர்சல் படத்தின் காட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. மெர்சல் படத்தின் சில நிமிட காட்சிகளுக்கே தொடை நடுங்கிப் போன பாஜக மக்களின் எதிர்ப்பை முழுமையாக எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.
ஹச். ராஜா அவர்களே! இந்த மோடி சர்க்கார் யோக்கியம் ஆனது எனில் விஜய்யின் கருத்து சுதந்திரத்துக்கு ஏன் இந்த மிரட்டல்கள்? விஜய் எல்லை மீற வில்லை. ஆனால் பூனை ஒன்று தன்னை புலி என்று நினைத்து சூடுபோட்டுக்கொண்டது. அந்த பூனைதான் தமிழக பி ஜே பி.
இன்று பராசக்தி படம் வெளியானால் கோவிலில் இருந்து மக்கள் அரசை வெளியேற்றுவார்கள் தான் ஹெச். ராஜா. அதற்காக குள்ள நரிகள் மூலவர் ஸ்த்தானத்திற்கு ஆசைப் படக்கூடாது.
ஜெயலலிதாவிற்கு நன்றாக தெரிந்து இருந்தது குள்ள நரிகளை எங்கு வைக்க வேண்டும் என்று? பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுவது போல அதிமுக பலவீனம், சில நரிகளுக்கு கொண்டாட்டம்.