Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி இருக்கும் வரை எங்களுக்கு பயமில்லை - ராஜேந்திர பாலாஜி ஓப்பன் டாக்

Advertiesment
மோடி இருக்கும் வரை எங்களுக்கு பயமில்லை - ராஜேந்திர பாலாஜி ஓப்பன் டாக்
, சனி, 21 அக்டோபர் 2017 (09:55 IST)
பிரதர் மோடி இருக்கும் வரை எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எங்களை யாரும் மிரட்ட முடியாது என அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே நடைபெற்ற ஒரு விழாவில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர் “அதிமுகவிற்கு எத்தனை பிரச்சனை வந்தாலும் அதை மோடி பார்த்துக்கொள்வார். அவர் இருக்கும் வரை அதிமுக கட்சியும், சின்னமும் நம்மிடமே இருக்கும். அதனால், எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. யாருக்கும் பயப்பட தேவையில்லை.
 
திமுகவில் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் 40 பேர் இருக்கிறார்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பார்கள்” என அவர் பேசினார்.
 
அதிமுகவை பாஜகவே இயக்குகிறது என்கிற புகார் எழுந்துள்ள நிலையில், அதை ஒத்துக்கொள்ளும் விதமாகவும், பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டது போலவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெர்சலுக்கு இப்டினா.. பராசக்தி படம் இப்போ வந்தா? - ப. சிதம்பரம் கேள்வி