Publish Date: Thu, 19 Mar 2026 (15:16 IST)
Updated Date: Thu, 19 Mar 2026 (15:19 IST)
நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா சில நாட்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். இந்த விஷயம் அரசியல் வட்டாரத்திலும், விஜயின் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதோடு விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார் சங்கீதா. இது நடந்து நாட்களிலேயே விஜய் நடிகை திரிஷா அழைத்துக்கொண்டு திருமணத்திற்கு சென்றார். எனவே சங்கீதா கூறிய அந்த நடிகை திரிஷாதான் என பலரும் நம்பினார்கள்..
இதைத்தொடர்ந்து, விஜயின் அரசியல் வாழ்க்கை பாதிக்கும் என்ன பல அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக பெண்களின் ஓட்டுக்களை விஜய் இழப்பார் என சொல்லப்படுகிறது. ஒருபக்கம், சங்கீதாவால் விஜயின் வேட்பு மனுவில் சிக்கல் வரும் என சொல்லப்படுகிறது.
அதாவது விஜய்யும் சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் இன்னும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை.. எனவே விஜய் தனது மனைவியின் மனுவின் சொத்து விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும். ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால் சங்கீதா பற்றிய விவரங்களை குறிப்பிடுவதில் குழப்பம் ஏற்படும்.. மனுவில் குளறுபடி ஏற்பட்டால் வேட்புமனுவை தள்ளுபடி செய்யும் நிலை ஏற்படும். விஜய் இதை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Mahendran
Publish Date: Thu, 19 Mar 2026 (15:16 IST)
Updated Date: Thu, 19 Mar 2026 (15:19 IST)