Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகம், கேரளாவில் இலவச பேருந்துகள் – மெர்சலாக்கிய விஜய் ரசிகர்கள்

Advertiesment
தமிழகம், கேரளாவில் இலவச பேருந்துகள் – மெர்சலாக்கிய விஜய் ரசிகர்கள்
, சனி, 22 ஜூன் 2019 (12:59 IST)
விஜய் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இலவச பேருந்துகளை இன்று மட்டும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இந்த வருட விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் விஜய்யின் 63வது படமான “பிகில்” படத்தின் முதல் இரண்டு போஸ்டர்களும் வெளியாகியுள்ளன. வருடாவருடம் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். விஜய் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள் கேக் வெட்டியும், போஸ்டர் ஒட்டியும், அன்னதானம், நீர் மோர்பந்தல் ஆகியவை அமைத்தும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சில பகுதிகளில் தனியார் பேருந்துகளில் விஜய் ஸ்டிக்கர் மற்றும் பேனர்களை ஒட்டி, இன்றைய நாள் முழுவதும் அதில் பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

ஒரு தனியார் பேருந்தில் விஜய் ஸ்டிக்கர்களை ஒட்டிய புதுச்சேரி விஜய் நற்பணி மன்றத்தினர், புதுச்சேரியிலிருந்து பாகூர் செல்லும் அந்த பேருந்தில் பயணிகள் இன்று முழுவதும் இலவசமாக பயணிக்கலாம் என்று கூறியுள்ளனர்.

இதே போல் சீர்காழி பகுதியில் இயங்கி வரும் விஜய் மக்கள் இயக்க தொண்டரணியை சேர்ந்த ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள ஒரு தனியார் பேருந்தில் சீர்காழியில் இருந்து மகேந்திரபள்ளி வரை இன்று முழுவதும் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டுக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்ட மாநிலம் கேரளா. அங்கேயும் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மலையாள விஜய் ரசிகர்கள் இலவச பேருந்து வசதியை ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் விஜய் பிறந்தநாளான இன்று சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ரத்ததான முகாம், மருத்துவ முகாம் போன்றவற்றை மேலும் சில பகுதிகளில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஆண்டில் 1459 கொலைகள் - திருமணத்துக்கு மீறிய உறவுகளால் அதிகரிக்கும் குற்றம் !