தமிழகத்தில் திருமணம் தாண்டிய உறவுகளால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1500 கொலைகள் நடந்துள்ளதாகக் காவல்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
திருமணத்துக்கு வெளியேயான உறவில் ரஞ்சித் எனும் நபர் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு சுமார் 20 கேள்விகளை எழுப்பியிருந்தனர். அது சம்மந்தமான விசாரணையில் நேற்று இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தது தமிழக காவல்துறை .
அதில் ‘தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் திருமணத்துக்கு வெளியேயான உறவால் மொத்தமாக 1459 கொலைகள் நடந்துள்ளன. இவற்றில் அதிகபட்சமாக சென்னையில் 158 கொலைகள் நடந்துள்ளன. அதுபோல கொலைத் தவிட ஆட்கடத்தல், மிரட்டல் மற்றும் தாக்குதல் ஆகியப் பிரிவுகளின் கீழ் 834 குற்றங்கள் நடந்துள்ளது.’ எனப் பதிலளித்தது.
இந்தப் பதில்களால் திருப்தியடையாத நீதிமன்றம் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஜுலை 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.