Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

Advertiesment
விஜய்

Mahendran

, வியாழன், 8 மே 2025 (11:17 IST)
இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், "விரைவில் சந்திப்போம், வெற்றி நிச்சயம்" என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியான நிலையில், மாணவ மாணவிகள் தேர்வு முடிவுகளை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
 
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் டூ தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி வரும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், இதுகுறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
"12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள தம்பி தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பொது தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வினை எல்லாவற்றையும் முடிவு செய்ததாக நினைக்கக்கூடாது என்பதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
 
எனவே, மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக செய்து, புதிய இலக்கை நோக்கி செல்ல அனைவருமே தயாராகுங்கள்.
 
வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்லும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.
 
விரைவில் சந்திப்போம், வெற்றி நிச்சயம்!"
 
என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ராணுவ வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை: ஏர் இந்தியா அறிவிப்பு..!