Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Result எதுவானாலும் கலங்க வேண்டாம்.. இது முடிவல்ல.. தேர்வு முடிவு நாளில் முதல்வர் அறிவுரை..!

Advertiesment
MK Stalin

Siva

, வியாழன், 8 மே 2025 (08:58 IST)
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருக்கும் நிலையில் மாணவர்கள் ரிசல்ட் எதுவானாலும் கவலைப்பட வேண்டாம் என்றும் தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல என்றும் அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
 
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன. Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.
 
தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.
 
பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்!
 
 
Edited by Siva 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூலி வேலைக்கு சவுதி சென்றவருக்கு லாட்டரியில் ரூ.57 கோடி பரிசு! - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!