Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளஸ் 2 தேர்வில் 100க்கு 100.. எந்தெந்த பாடத்தில் எத்தனை மாணவர்கள்?

Advertiesment
பிளஸ் 2 தேர்வு

Mahendran

, வியாழன், 8 மே 2025 (09:56 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் 25 வரை நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை  மொத்தம் 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர்.
 
இந்த நிலையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை அறிவித்தார்.
 
இதில் 7.53 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.03% ஆகும். வழக்கம்போல், மாணவிகளே மேலோங்கியுள்ளனர். 4.05 லட்சம் மாணவிகள் (96.70%) மற்றும் 3.47 லட்சம் மாணவர்கள் (93.16%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
இந்த தேர்வில் மொத்தம் 26,877 பேர் நூற்றுக்கு நூறு மார்க் பெற்றுள்ளனர். இதில் கணினி அறிவியல் பாடத்தில் மட்டும் 9,536 பேர் நூற்றுக்குநூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.
 
மற்ற பாடங்களில் நூறு மார்க் பெற்ற மாணவர்களின் விவரம்:
 
தமிழ் – 135
 
இயற்பியல் – 1,125
 
வேதியியல் – 3,181
 
உயிரியல் – 827
 
கணிதம் – 3,022
 
தாவரவியல் – 269
 
விலங்கியல் – 36
 
வணிகவியல் – 1,624
 
கணக்குப்பதிவியல் – 1,240
 
பொருளியல் – 556
 
கணினிப் பயன்பாடுகள் – 4,208
 
வணிகக் கணிதம்/புள்ளியியல் – 273
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியானது ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்! அரியலூர் முதலிடம் பிடித்து சாதனை!