Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குட்டு வாங்கியும் மல்லுகட்டும் வெற்றிவேல்; உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

Advertiesment
குட்டு வாங்கியும் மல்லுகட்டும் வெற்றிவேல்; உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
, திங்கள், 11 செப்டம்பர் 2017 (14:42 IST)
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து எம்.எல்.ஏ.வெற்றிவேல் மேல்முறையீடு செய்துள்ளார்.


 

 
அதிமுகவில் தற்போது குழப்பங்கள் நீடித்து வருவதால் அதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்க எடப்பாடி பழனிச்சாமி அணி முடிவெடுத்தது. இதனையடுத்து பொதுக்குழு வரும் 12-ஆம் தேதி கூட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
 
இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் நீதிமன்றத்தை நாடினார். எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கூட்ட உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என அவர் மனுதாக்கல் செய்திருந்தர். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது.
 
இதனை விசாரித்த நீதிமன்றம் வெற்றிவேல் அளித்த மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து தற்போது வெற்றிவேல் உயர்நீதிமன்ற தீர்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
 
ஏற்கனவே உயர் நீதிமன்றம் பொதுக்குழு கூட்டம் விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம்தான் கூற வேண்டும் என்று கூறியதோடு வெற்றிவேலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் வெற்றிவேல் மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீடு மனு இன்று மாலை விசாரணைக்கு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் நவதோயா பள்ளிகளை தொடங்க உயர்நீதிமன்றம் அனுமதி