Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொதுக்குழு கூட்டத்தில் சாப்பாட்டு சாப்பிட்டு செல்லலாம்; தினகரன் அணி எம்.எ.ஏ.வுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை

பொதுக்குழு கூட்டத்தில் சாப்பாட்டு சாப்பிட்டு செல்லலாம்; தினகரன் அணி எம்.எ.ஏ.வுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை
, திங்கள், 11 செப்டம்பர் 2017 (12:46 IST)
நாளை நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


 

 
எடப்பாடி பழனிச்சாமி அணியில் ஓபிஎஸ் இணைந்ததை அடுத்து அதிமுக கட்சியில் இருந்து சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை நீக்க முடிவு செய்தனர். இதற்காக நாளை பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. வெற்றிவேல் தனிப்பட்ட முறையில் இந்த மனுவை தாக்கல் செய்ததாகவும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகவும் கூறியதோடு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுக்குழுவில் கலந்துகொள்ள விரும்பாவிட்டால் வீட்டிலே இருந்துகொள்ளலாம் அல்லது பொதுக்குழுவில் கலந்துகொள்ளலாம் அல்லது சாப்பிட்டு மட்டும் வரலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
 
இதையடுத்து நாளை பொதுக்குழு கூட்டம் நடப்பது உறுதியாகிவிட்டது. இதற்காக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,780 பேர் மற்றும் செயற்குழு உறுப்பினர் 250 பேர் ஆகியோருக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் முதலில் ஒரு முட்டாள்; அப்புறம்....: வம்பிழுக்கும் சுப்பிரமணியன் சுவாமி!