Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலூர் தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன?

வேலூர் தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன?
, வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (22:16 IST)
வேலூர் தொகுதி மக்களவை தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றபோதே நடந்திருந்தால் நிச்சயம் கதிர் ஆனந்த் சுமார் ஒரு லட்சம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். ஏனெனில் பெரும்பாலான திமுக வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசம் அவ்வாறுதான் இருந்தது.
 
ஆனால் மக்களவை தேர்தலுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து 37 திமுக எம்பிக்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை. குறிப்பாக முத்தலாக், காஷ்மீர் போன்ற விவகாரங்களில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்க முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை. அதேபோல் இனிவரும் காலத்திலும் மத்திய அரசின் எந்த திட்டத்தையும் திமுக எம்பிக்களால் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை மனதில் வைத்தே வேலூர் தொகுதி மக்கள் திமுகவுக்கு முழு அளவில் ஆதரவு தரவில்லை.
 
இந்த நிலையில் இந்த தேர்தலின்முடிவில் இருந்து தினகரன் மற்றும் கமல்ஹாசன் பிரித்த வாக்குகள் அதிமுக வாக்குகள் என்றே தெரிகிறது. அவர்கள் இருவரும் போட்டியிடாததால் அந்த வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்கு விழுந்துள்ளதால் வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்துள்ளதும் தெரிய வருகிறது. மொத்தத்தில் நாம் தமிழர் கட்சி உள்பட தமிழகத்தில் எந்த கட்சியும் அதிமுக, திமுக மாறி மாறி வெற்றி பெறுவதை தடுக்க முடியாது என்பதே இந்த தேர்தல் முடிவில் இருந்து தெரிய வருகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொமேட்டோவிடம் பலூன் வேண்டும் என கேட்ட குழந்தை: அன்பு பரிசு அனுப்பிய சொமேட்டோ