Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிகம் கொடுத்தால் ஆளுங்கட்சி: குறைத்து கொடுத்தால் எதிர்கட்சி – மனம்நொந்த சீமான்

Advertiesment
Tamilnadu News
, வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (13:40 IST)
வேலூர் தேர்தல் முடிவுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் தேர்தல் குறித்த தனது கருத்துகளை கூறியுள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து முன்னிலையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த தேர்தலில் அதிமுக, திமுக தவிர மற்ற முக்கிய கட்சிகள் எதுவும் போட்டியிடாத நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் போட்டியிட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 24,818 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சீமான் “அதிகம் பணம் கொடுத்தால் ஆளும்கட்சி, குறைந்த பணம் கொடுத்தால் எதிர்க்கட்சி என்ற நிலைதான் தமிழகத்தில் நீடித்து வருகிறது. பணம் வாங்காமல் ஓட்டு போடும் நிலை வந்தால் மக்கள் நிச்சயம் நாம் தமிழருக்கு ஓட்டு போடுவார்கள். பணத்திற்காக ஓட்டை விற்கும்வரை எதுவும் மாறாது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீரிய பெண்கள் போராட்டம் உண்மையா?? வைரல் வீடியோவின் உண்மை பிண்ணனி என்ன?