Publish Date: Fri, 09 Aug 2019 (11:59 IST)
Updated Date: Fri, 09 Aug 2019 (12:00 IST)
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை முன்னிலை வகித்து வந்த அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை திடீரென பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்கிறார் திமுக கதிர் ஆனந்த்.
தற்போதைய நிலவரப்படி கதிர் ஆனந்த் 2,64,130 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 2,56,633 வாக்குகள் பெற்று பின்தங்கியிருக்கிறார். சிறிய அளவு வாக்கு வித்தியாசத்தில் இருவரின் வெற்றி வாய்ப்புகளும் உள்ளதால் இரு கட்சிகளும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பீதியில் உள்ளன.