Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்திரிக்கையாளரைத் தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் – இரு தரப்பிலும் புகார் !

Advertiesment
பத்திரிக்கையாளரைத் தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் – இரு தரப்பிலும் புகார் !
, செவ்வாய், 19 நவம்பர் 2019 (08:15 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவனை மோசமாக விமர்சித்த பத்திரிக்கையாளரை அக்கட்சியினர் தாக்கியுள்ளனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன் இந்து கோயில்களில் ஆபாசமான படங்கள் உள்ளன. அவற்றைக் குழந்தைகள் பார்க்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக அவருக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் ஆகியோர் அரசியல் தளத்தில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் கலைஞர் பாதை எனும் மாதப்பத்திரிக்கையை நடத்தும் வேலூரைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் முகநூலில் இது குறித்து கடுமையான விமர்சனம் செய்தார்.

அவரது விமர்சனத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவரிடம் அந்த வீடியோவின் கமெண்ட்டில் வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்களிடம் நேரில் வரசொல்லி குணசேகரன் சவால் விட்டார். அதையடுத்து அவர் இருக்கும் இடத்துக்கு சென்ற விசிக தொண்டர்கள் அவருடன் நடந்த வாக்குவாதத்தில் அவரைக் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து இருதரப்பும் மற்றவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க சொல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்கள் ஆட்சியமைக்கப் போவதை அதிசயம் என சொல்லியிருக்கலாம் – ரஜினியை பங்கமாகக் கலாய்த்த ஜெயக்குமார் !