ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என தலித் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பிரியாணிக்கு புகழ்பெற்ற ஆம்பூரில் நாளை பிரியாணி திருவிழா தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரியாணி திருவிழாவில் பல்வேறு வகையான பிரியாணிகளும் இடம்பெறும் நிலையில் பீப் பிரியாணி இடம்பெறாதது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி இடம்பெறாவிட்டால் பீப் பிரியாணி செய்து திருவிழா நடக்கும் மைதானத்தின் முன்னே அனைவருக்கும் இலவசமாக வழங்கி போராட்டம் நடத்தப்படும் என விசிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.