Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இருதயக் கூடு எரிகிறது.. எவ்வளவுதான் பொறுமை காப்பது? தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து வைரமுத்து..!

Advertiesment
இருதயக் கூடு எரிகிறது.. எவ்வளவுதான் பொறுமை காப்பது? தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து வைரமுத்து..!

Siva

, வெள்ளி, 18 அக்டோபர் 2024 (20:12 IST)
இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில், பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘திராவிடம் நல் திருநாடு’ என்ற வார்த்தை விடுபட்டதால் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: 
 
தமிழையும்
தமிழ் நாட்டையும்
திராவிடக் கருத்தியலையும்
எதிர்க்கும் அல்லது இழிவுசெய்யும்
பல நிகழ்வுகளைக் கண்டும்
காணாமல் போயிருக்கிறோம் 
 
ஆனால்,
தமிழ்த்தாய் வாழ்த்தில்
"தெக்கணமும் அதிற்சிறந்த
திராவிடநல் திருநாடும்"
என்ற உயிர் வாக்கியத்தைத்
தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து
தவிர்த்ததைக் 
காதும் கண்ணுமுள்ள தமிழர்கள்
கடந்துபோக மாட்டார்கள்
 
இருதயக் கூடு எரிகிறது
 
எவ்வளவுதான்
பொறுமை காப்பது?
 
இந்தச் செயலுக்குக்
காரணமானவர்கள்
யாராக இருந்தாலும்
தமிழர்கள் அவர்களை
மன்னிக்கவே மாட்டார்கள்
 
"திராவிட" என்ற  
சொல்லை நீக்கிவிட்டு
தேசிய கீதத்தைப் பாடமுடியுமா?
 
தமிழ்த்தாய் வாழ்த்தில் 
தவிர்ப்பதற்கு மட்டும்
யார் தைரியம் கொடுத்தது?
 
திராவிடம் என்பது நாடல்ல; 
இந்தியாவின்
ஆதி நாகரிகத்தின் குறியீடு
 
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்
இதுபோன்ற இழிவுகள்
தொடர்ந்தால்
மானமுள்ள தமிழர்கள்
தெருவில் இறங்குவார்கள்;
தீமைக்குத் தீயிடுவார்கள்
 
மறக்க வேண்டாம்
 
தாய்மொழி காக்கத் தங்கள்
உடலுக்கும் உயிருக்குமே
தீவைத்துக் கொண்டவர்கள்
தமிழர்கள்
 
அந்த நெருப்பின் மிச்சம்
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்! கமல்ஹாசன் ஆவேசம்..!