Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்! கமல்ஹாசன் ஆவேசம்..!

Advertiesment
Kamal

Siva

, வெள்ளி, 18 அக்டோபர் 2024 (19:59 IST)
இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில், பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘திராவிடம் நல் திருநாடு’ என்ற வார்த்தை விடுபட்டதால் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
 
‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியை சரியாக பாடாமல் அடுத்த வரியான ‘தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே’ என்று பாடினர்.  இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசன் இதுகுறித்து ஆவேசமாக கூறியதாவது:
 
திராவிடம் நாடு தழுவியது. 
தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது. 
 
அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும்,  இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல். 
 
நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!
 
எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலைகளை ஏற்றி சென்ற லாரி விபத்து.. தப்பித்து சென்ற முதலைகளால் பொதுமக்கள் அச்சம்..!