நாகலாந்து மாநிலத்தில் நிகழ்ந்ததுபோல் தமிழகத்திலும் நடக்கும் என தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ள்தோடு, தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநரை வெளியேற்ற வேண்டும் என்றும், முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுபடுத்தி விஷத்தை கக்கி இருக்கிறார் ஆளுநர் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருக்கிறது என்றும், நாகலாந்து மாநிலத்தில் நிகழ்ந்ததுபோல் தமிழகத்திலும் நடக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநாடு செல்வதால் ஒரு மாநிலத்திற்கு எந்த முதலீடுகளும் வராது என உதகை பல்கலைக்கழக துணை வேந்தர் மாநாட்டில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.