Publish Date: Thu, 01 Jun 2023 (16:25 IST)
Updated Date: Thu, 01 Jun 2023 (16:39 IST)
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய 101 ஆண்ட்ராய்ட் ஆப்களில் SpinOK என்னும் ஸ்பைவேர் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் பலரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் திருட்டுப்போனதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 101 ஆப்களில் Noizz, zapya, share, VFly, MVbit, Biugo, Cashzine, Fizzo, Novel, Cash Em, Tick, Watch to Ean, கிரேசி டிராப் கேமிங் ஆகிய 10 ஆப்களை மட்டும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆப்கள் மூலம் பயனர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் தகவல்கள் திருட்டுப் போக வாய்ப்புள்ளதால் இவற்றை உடனே டெலிட் செய்துவிட வேண்டும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் பிளே ஸ்டோரில் இருக்கும் ஆப்களை கண்காணிக்கும் பணியில் பல்வேறு ஆன்டி ஸ்பைவேர் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.