Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்மையானது வடிவேலு காமெடி – வீட்டுக்கு சாப்பிட சென்ற கைதி தப்பித்து ஓட்டம் !

Advertiesment
உண்மையானது வடிவேலு காமெடி – வீட்டுக்கு சாப்பிட சென்ற கைதி தப்பித்து ஓட்டம் !
, வியாழன், 5 மார்ச் 2020 (16:06 IST)
வடிவேலுவின் மருதமலைக் காமெடி போல காஞ்சிபுரத்தில் ஒரு கைதி தப்பித்துச் சென்றது பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த செங்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மீது வழிப்பறி, நகைத்திருட்டு என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணைக் கைதியாக இருந்த அவரை போலீஸார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது வெங்கடேசன், வாலாஜா அடுத்த செங்காட்டில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்று இரவு உணவு சாப்பிட விரும்புவதாக கூறியுள்ளார். அவரை நம்பி காவலர்களும் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, இவர்கள் வெளியே இருந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் வீட்டினுள் சென்று பார்க்க அவர் பின்புறமாக தப்பித்துச் சென்றுள்ளார்.

தப்பியோடிய வெங்கடேசனை பிடிக்க 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் அஜாக்கிரதையாக இருந்த ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பரந்தாமன், எஸ்ஐ சுந்தரபாண்டியன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளார் டிஐஜி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

X50 Pro 5G ரீசேல்: ரிலய்மி & ப்ளிப்கார்ட் தளத்தில்!!