Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காமெடி நடிகரின் சிகிச்சை – சமூகவலைதளங்களில் அள்ளிக்கொடுத்த ரசிகர்கள்!

Advertiesment
காமெடி நடிகரின் சிகிச்சை – சமூகவலைதளங்களில் அள்ளிக்கொடுத்த ரசிகர்கள்!
, திங்கள், 2 மார்ச் 2020 (07:38 IST)
லோகேஷ் பாப்

நானும் ரௌடிதான் படத்தில் நடித்த காமெடி நடிகர் லோகேஷ் பாப்க்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே சமூக வலைதளங்களின் மூலம் பலரும் உதவி செய்துள்ளனர்.

ஆதித்யா தொலைக்காட்சியில் மொக்க ஆஃப் த டே என்ற நிகழ்ச்சியை நடத்தி மக்களிடையே பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் லோகேஷ் பாப். அதன்  மூலம் அவருக்கு நானும் ரௌடிதான் படத்தில் வாய்ப்புக் கிடைக்க உடல் இயங்க முடியாத ஒரு ரௌடியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

இந்நிலையில் அவருக்கு சில நாட்களுக்கு முன்னதாக பக்கவாதம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது நண்பரும் நடிகருமான, குட்டி கோபி சமூக வலைதளத்தில் அவரது சிகிச்சைக்கு 7 லட்ச ரூபாய் தேவை என சொல்லி உதவிக் கேட்டு இருந்தார். இந்நிலையில் பலரும் அவரது சிகிச்சைக்கு உதவி செய்யவே, இப்போது போதுமான பணம் கிடைத்துவிட்டது. இனிமேல் யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என சொல்லி நன்றி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருநங்கைகளுக்கு வீடு கட்ட ஒன்றரை கோடி – லாரன்ஸிடம் வழங்கிய அக்‌ஷய் குமார்!