Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல் விலை உயர்வால், அரசு பேருந்துகளுக்கு டிமேண்ட்!

பெட்ரோல் விலை உயர்வால், அரசு பேருந்துகளுக்கு டிமேண்ட்!
, செவ்வாய், 14 ஜூன் 2022 (10:26 IST)
சென்னை மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்துள்ளது. 

 
சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது. 
 
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ போன்றவற்றின் கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் அரசு போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆம், கொரோனா காலத்தில் சரிந்து போன அரசு போக்குவரத்து பயன்பாடு தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வாலும், பெண்களுக்கு இலவசம் என்பதாலும் அதிகரித்துள்ளது. 
 
அதன்படி மாநகர பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 25 லட்சமாக உயர்ந்துள்ளது.  சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3,200 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனாவிற்கு முன்பு வரை தினமும் 32 லட்சம் பயணிகள் மாநகர பஸ்களில் பயணித்தனர் என்பது கூடுதல் தகவல். 
 
மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் பயணத்திற்கு ஏசி பேருந்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இருக்கும் ஏசி பஸ்கள் முழு அளவில் தற்போது இயக்கப்பட்டாலும் கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா சிகிச்சை எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது! – இந்தியாவில் கொரோனா!