திருநெல்வேலியில் தனியார் கல்லூரியில் சுகாதாரமற்ற தன்மையால் மாணவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் கல்லூரியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திடியூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து கல்லூரியில் சோதனை செய்ததில் சுகாதாரமற்ற தண்ணீரே எலிக்காய்ச்சலுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து சுகாதாரத்துறை நடத்திய சோதனையில் கல்லூரியில் சுகாதார வசதிகள் குறைவாக இருந்ததும், கல்லூரியில் நடத்தப்பட்ட உணவகங்களும் சுகாதரமற்ற முறையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.
அதை தொடர்ந்து உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டதுன், சுகாதார வசதிகளை ஏற்படுத்தும் வரை கல்லூரியை மூடுவதற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K