தீபாவளியை முந்திக் கொண்டு வரும் பருவமழை! - வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

Prasanth K
வெள்ளி, 10 அக்டோபர் 2025 (08:14 IST)

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வரும் நிலையில் அதற்கு முன்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை முடிந்து சில மாதங்கள் கழித்து அக்டோபர் வாக்கில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் நீர் பாசனம் வடகிழக்கு பருவமழையை அதிகளவில் நம்பியுள்ளது.

 

இந்த மாதம் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பண்டிகைக்கு ஆர்வமாக தயாராகி வருகின்றன. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது, உறவினர்கள் வீட்டிற்கு செல்வது, வெளியூர் செல்வது என மக்கள் பிஸியாக இருக்கும் சமயமாதலால் மழை பெய்யாமல் இருக்க வேண்டும் என்பதே பலரது நினைப்பாக இருக்கும்.

 

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீபாவளிக்கும் முன்பாக தொடங்கிவிடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி, அக்டோபர் 16 முதல் 18ம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தீபாவளி அன்று பல மாவட்டங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தீபாவளி கொண்டாட்டத்தை பாதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments