அடிமை அரசுக்கு நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை! – உதயநிதி கண்டனம்!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (13:44 IST)
தேனியில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் அவமரியாதை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசுக்கு நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி கீழவடகரை பகுதியில் நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், இதுகுறித்து பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக இளைஞரணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் “திருவள்ளூர்-கடலூர் மாவட்டங்களை அடுத்து தேனி கீழவடகரையில் பட்டியலின பெண் ஊராட்சிமன்ற தலைவருக்கு எதிராக அநீதி தொடர்கிறது. பாஜக மாநில துணைத் தலைவர் தன்னை செயல்படவிடவில்லை என்று அந்த பெண் மக்கள் பிரதிநிதியே கூறுகிறார். ஆனாலும், அடிமை அரசுக்கு நடவடிக்கை எடுக்கத் துணிச்சல் வரவில்லை.” என்று கூறியுள்ளார்.

மேலும் “உள்ளாட்சியில் பட்டியலின, பழங்குடியினருக்கு அதிகாரம் கிடைக்க முறையாக இட ஒதுக்கீட்டு வரையறைகளை செய்ய வேண்டுமெனக் கழகம் நீதிமன்றத்தில் போராடியது. இன்று ஊரக பகுதி பட்டியல்-பழங்குடியின மக்கள் பிரதிநிதிகளை அடிமை அரசு காக்கவில்லை. ஒடுக்கும் சாதியவாதிகள் யாரானாலும் கடும் நடவடிக்கை தேவை.” என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் கொஞ்சம் இறங்கினால் 1 லட்சத்திற்கு கீழே வந்துவிடும் ஒரு சவரன் தங்கம்.. தொடர் சரிவு..!

எனக்கு சீட் கொடுக்காமல் என் மகனுக்கு சீட் கொடுப்பதா? தந்தை பொங்கியதால் திமுக எடுத்த அதிரடி முடிவு..!

பால்டாயில் குடிச்சதெல்லாம் பன்ச் வசனம் பேசுது!.. உதயநிதியை பங்கம் பண்ணிய பழனிச்சாமி...

தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா? ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை

துணிக்கடைக்கு நடிகை வந்தா கூட்டம் கூடும்.. ஆனா துணி எடுக்க மாட்டாங்க!.. விஜயை நக்கலடித்த பழனிச்சாமி!...

அடுத்த கட்டுரையில்
Show comments