Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”நீதான் என் வாழ்க்கை” மேட்ரிமோனி வழியாக வந்த காதல்! – பெண்களிடம் வாலிபர் மோசடி!

Advertiesment
”நீதான் என் வாழ்க்கை” மேட்ரிமோனி வழியாக வந்த காதல்! – பெண்களிடம் வாலிபர் மோசடி!
, திங்கள், 12 அக்டோபர் 2020 (13:02 IST)
திருவண்ணாமலையில் பெண்களிடம் திருமண ஆசை காட்டி நகைகளை மோசடி செய்த இளைஞரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட காலமாக திருமணமாகாமல் இருந்த நிலையில் திருமணத்திற்கான மேட்ரிமோனி தளத்தில் பதிவு செய்துள்ளார். அதன்மூலமாக திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திக் ராஜாவும் அந்த பெண்ணை மணந்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். பின்னர் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என கார்த்திக் ராஜா கேட்க அந்த பெண்ணும் தனது நகைகளை கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு பிறகு கார்த்திக் ராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் ராஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில் திருமண வரன் பார்க்கும் ஆன்லைன் தளங்கள் மூலமாக இப்படியாக பல பெண்களிடம் பேசி கார்த்திக் ராஜா நகைகளை பெற்று மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புயல் வீசினாலும் சமாளிக்க அரசு தயார் - முதல்வர் பழனிசாமி