Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

PG மருத்துவ படிப்பில் சேருவதை தடுக்க புதிய ஆயுதம்: உதயநிதி!

PG மருத்துவ படிப்பில் சேருவதை தடுக்க புதிய ஆயுதம்: உதயநிதி!
, புதன், 18 நவம்பர் 2020 (07:28 IST)
ஒரே நாடு ஒரே தேர்வு என்ற அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் மற்றும் நீட்தேர்வு எதிர்த்தாலும் பெரும்பாலான மாநிலங்கள் நீட் தேர்வை ஒப்புக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ், ஜிப்மர் உட்பட 11 மருத்துவ நிறுவனங்களுக்கு மட்டும் தனியாக ஒரு தேர்வு நடத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன 
 
அனைத்து மருத்து படிப்புகளுக்கும் ஒரே தேர்வாக நீட்தேர்வு இருக்கும் போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் ஏன் தனித்தேர்வு என்ற கேள்வி தற்போது மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது
 
இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 13 கொலைகள் செய்த நீட்டுக்கு விலக்கு இல்லை. ஆனால் ஏழை மாணவர்கள் எய்ம்ஸ்-ஜிப்மர் போன்ற மத்தியரசு நிறுவனங்களில் PG மருத்துவ படிப்பில் சேருவதை தடுக்க புதிதாக INI-CET  எனும் ஆயுதத்தை அனுப்புகிறார்கள். இனியும் உயிர்களை இழக்க தமிழகம் தயாரில்லை. NEET, INI-CET என அனைத்தையும் ரத்து செய்க.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களை காப்பாற்றுங்கள்: முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கடிதம்!