Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக எம் எல் ஏ – இலவசமாக சிகிச்சை!

நடிகர் தவசிக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக எம் எல் ஏ – இலவசமாக சிகிச்சை!
, செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:22 IST)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் தவசி புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனார். தனக்கு சக நடிகர்கள் உதவ வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்குச் சீமையிலே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் தவசி பிரபலமானது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த கோடாங்கி கதாபாத்திரத்தின் மூலம்தான். இப்படத்தின் மூலம் புகழ்பெற்றதால் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் அவருக்குத் திடீரென்று உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சாப்பிட முடியாமல் அவர் மிகவும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத நிலைக்கு மாறியுள்ளார். இதற்காக மதுரையில் உள்ள சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசி தனக்குச் சக நடிகர்கள் உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சரவணா மருத்துவமனையின் உரிமையாளரும் திமுக எம் எல் ஏ வுமான டாக்டர் சரவணன் தங்கள் மருத்துவமனையில் தவசிக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பொருளாதார ரீதியாக யாராவது உதவினால் அவரது குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய பேருந்துக்குள் ஒழுகியது மழைநீரா, ஊழலா? - கமல்ஹாசன் டுவீட்