Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நோட்டா ஜி இன்னும் பச்ச கொடி காட்டலையா? ஈபிஎஸ்-ஐ கலாய்ந்த உதயநிதி!

Advertiesment
Tamilnadu
, வெள்ளி, 24 ஜூலை 2020 (13:40 IST)
எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எவ்வித கருத்தும் இல்லையா என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 
 
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் சிலைகள் உள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு சிலர் காவித்துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 
இதனிடையே எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து இன்னும் வாய்திறக்காமல் உள்ளார் தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி. 
 
எனவே இதனை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் சிலை அவமதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எவ்வித கருத்தும் இல்லையா அல்லது பதிலளிக்க நோட்டாஜியிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லையா? அம்மா மரண மர்மத்தையே மறந்துட்டோம். இதெல்லாம் எதற்கு?  என நினைத்திருக்கலாம்? தற்போது இவருக்கு நிறுவனரைவிட உள்வாடகைக்கு எடுத்திருப்பவரே முக்கியம் என பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா பரவலுக்கு யார் காரணம்? பிளாக் லைவ்ஸ் மேட்டர் இளசுகள் மீது பழி!