திருமண விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் மணமக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் இபிஎஸ் போல இருக்கக் கூடாது என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நடிகர், தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது
அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளர் உதய சூரியன் திருமண விழாவில் கலந்து கொண்டார். அவர் திருமணத்தை நடத்தி முடித்த பிறகு பேசும் போது மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்றும் ஓபிஎஸ் இபிஎஸ் போல இருக்கக் கூடாது என்றும் பேசினார்
அவரது பேச்சு திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் சிரிப்பு அலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது