”சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்படுத்த எண்ணம் இல்லை. ஒருவேளை ஆட்சி மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவர எண்ணம் இருக்கலாம்” என சூசகமாக பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்க இருந்த நலதிட்ட உதவிகளை காலதாமதமாக இன்று மதுர வாயலில் அளித்தார் உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்வில் டி.ஆர்.பாலு அவர்களும் கலந்து கொண்டார்.
இதில் பேசிய உதயநிதி “டி.ஆர்.பாலுவை நான் மாமா என்றுதான் அழைப்பேன். அவர் வராமல் இந்த விழாவை நடத்த கூடாது என அவர் கேட்டுக்கொண்டதற்காகதான் காலதாமதமாக இன்று வழங்கப்படுகிறது.
வெற்றிடம் என்று கூறிக்கொண்டு நிரப்புவதற்கு சில நடிகர்கள் வந்தார்கள். வந்தவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். மக்கள் பிரச்சினைகள் குறித்து எம்.பிக்கள் மனு கொடுக்கிறார்கள். ஆனால் திட்டங்கள் வேறு எங்கேயோ போகிறது. கேட்டால் எங்களுக்கு ஓட்டு போடலைன்னா அப்படிதான் என நேரடியாக சொல்கிறார்கள். சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கிடையாது என தலைவர் சொல்லியிருக்கிறார். ஒருவேளை ஆளுங்கட்சிக்கு தீர்மானம் கொண்டுவர நினைத்திருக்கலாம்” என பேசியுள்ளார்.
இதை வைத்து பார்க்கும்போது திமுக எதோ பலமான திட்டத்தோடு செயல்பட்டு வருவதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.