Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்க.தமிழ்செல்வன் வந்துதான் தேனி திமுகவை நிமிர்த்த போகிறாரா? அதிருப்தியில் தேனி திமுக

Advertiesment
தங்க.தமிழ்செல்வன் வந்துதான் தேனி திமுகவை நிமிர்த்த போகிறாரா? அதிருப்தியில் தேனி திமுக
, சனி, 29 ஜூன் 2019 (15:47 IST)
தற்போதைய சூழலில் தங்க.தமிழ்செல்வன் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்ட திமுகவினரோ தங்க.தமிழ்செல்வன் இணைந்ததில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தேனி பகுதியை சேர்ந்த தங்க.தமிழ்செல்வன் அதிமுகவில் இருந்த காலம்தொட்டே தேனி திமுகவினருடன் பகைமையோடு நடந்து வந்தவர். அதிமுகவில் இருந்தபோதும், அமமுகவில் இருந்தபோதும், அவர் திமுகவையும், ஸ்டாலினையும், கலைஞர் கருணாநிதியையும் விமர்சித்து பேசியவை எக்கசக்கம்.

அப்போதிருந்தே தங்கசெல்வன் ஆட்களுக்கும், திமுகவினருக்கும் ஒத்து போவதில்லை. இந்நிலையில் அவர் திமுகவில் இணைந்துவிட்டால் இத்தனை வருட கருத்து மோதல்களையும் மறந்துவிட்டு அவருடன் நட்பு பாராட்ட முடியுமா என தேனி திமுகவில் சர்ச்சைகள் உண்டாகியுள்ளதாம். மேலும் கட்சி ஏற்கனவே நல்ல வலுவாக இருக்கிறது. நடந்து முடிந்த இரண்டு தேர்தல்களுமே அதற்கு உதாரணம். அப்படியிருக்க தமிழ்செல்வன் வந்துதான் தேனி திமுக உயரப்போகிறது என்பது போல தமிழ்செல்வன் ஆட்கள் பேசி வருவது தேனி பக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடகொரிய அதிபர் கிம்மை திடீரென சந்திக்க அழைத்த டிரம்ப்!