இன்று அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. 
	
 
									
										
								
																	
	
	 
	சமீபத்தில் சட்டமன்ற கூட்டத்தில் சேப்பாக்கம் எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைகழக ஆட்சி மன்ற குழு உறுப்பினராக பொறுப்பளித்து சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அதன்படி அடுத்த 3 ஆண்டுகளுக்கு பல்கலைகழக ஆட்சி மன்றக்குழுவில் உதயநிதி பொறுப்பு வகிக்க உள்ளார்.
	 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	இந்நிலையில் இன்று அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை. 
	 
 
									
										
			        							
								
																	
	சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் கூட்டத்திலேயே அவர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சித் தேர்தல் பணிகள் காரணமாக அவர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.