Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுர்ஜித் இறந்த சோகம் மறைவதற்குள் அடுத்த சோகம்! – 2 வயது குழந்தை பலி!

Advertiesment
சுர்ஜித் இறந்த சோகம் மறைவதற்குள் அடுத்த சோகம்! – 2 வயது குழந்தை பலி!
, செவ்வாய், 29 அக்டோபர் 2019 (11:05 IST)
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் இறந்த சம்பவம் தமிழ்நாட்டையே கலங்க வைத்திருக்கும் அதேசமயம் மற்றொரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர் லிங்கேஸ்வரன். இவருக்கு ரேவதி சஞ்சனா என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது. நேற்று லிங்கேஸ்வரனும், அவரது மனைவி நிஷாவும் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை மீட்க நடந்த முயற்சிகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது தங்களது மகள் ரேவதியை காணாமல் திடுக்கிட்ட அவர்கள் எல்லா பக்கமும் தேடியிருக்கிறார்கள். அப்போது பாத்ரூமில் தண்ணி பக்கெட்டில் குழந்தை ரேவதி தவறி விழுந்து மூச்சு விட முடியாமல் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதுள்ளனர். உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனை சென்றிருக்கிறார்கள். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சுர்ஜித் இறந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு குழந்தையும் இறந்துள்ள சம்பவம் பலருக்கு மேலும் வேதனையை அளித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலுக்குக் குறுக்கே நின்ற தாய் – கொலை செய்து பிணத்தை மறைத்த மகள் !