Publish Date: Tue, 29 Oct 2019 (09:00 IST)
Updated Date: Tue, 29 Oct 2019 (09:03 IST)
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதை அடுத்து, அவனது உடல் கிருஸ்துவ முறைப்படி கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
திருச்சி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித், 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான். இதனையடுத்து அவனது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சுஜித்தின் உடல் ஃபாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்தில் கிறுஸ்துவ முறைப்படி, நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் உடலுக்கு அப்பகுதி மக்கள் உட்பட தமிழகம் முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.