சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லூர்ப் சாலை பகுதியில் கடந்த ஆண்டு சென்னை மெட்ரோ வேலைகளால் ஏற்படுத்தப்பட்ட ஒருவழிப் போக்குவரத்து முறை தற்போது பணிகள் முழுமையாக முடிவு பெற்றதால் மாற்றம் செய்யப்படுகிறது.
CMRL பணி ஒரு பகுதியில் முடிவடைந்ததை தொடர்ந்து, நெரிசல் இல்லாத நேரங்களில் மே 9 முதல் அதாவது இன்று முதல் சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் லூர்ப் சாலையில் மீண்டும் இருவழிப் போக்குவரத்து நடைமுறையில் வரும் என சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
நெரிசல் நேரங்களில் மட்டும் ஒருவழி தொடரும்:
காலை 07.30 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 17.00 மணி முதல் 20.30 மணி வரை
இந்த நேரங்களில், அதிக போக்குவரத்து காரணமாக வழக்கம்போல் ஒருவழிப் போக்குவரத்து தொடர்ந்தும் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை போக்குவரத்து துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.