Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த பக்கம் போலீஸ் புடிக்கிறாங்க! கூகிள் மேப்பில் குறித்து வைத்த இளைஞர்! - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா சொன்ன யோசனை!

TRB Rajaa

Prasanth Karthick

, செவ்வாய், 23 ஜூலை 2024 (10:28 IST)

சென்னையில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனை செய்யும் பகுதியை இளைஞர் ஒருவர் கூகிள் மேப்பில் குறித்து வைத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

 

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் அதேசமயம் விபத்துகளால் உயிரிழப்பு சம்பவங்களும் தொடர்கதையாகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

சமீப காலமாக போக்குவரத்து காவலர்கள் சென்னையின் பல பகுதிகளில் சோதனை செய்து ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இவ்வாறான சமயங்களில் சில வாகன ஓட்டிகள் எதிரே செல்லும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அந்த பக்கம் போலீஸ் சோதனை நடப்பதை சங்கேத குறியீடுகளால் உணர்த்தும் சேவையை பல காலமாக செய்து வருகின்றனர்.
 

 

அதில் ஒரு இளைஞர் ஒரு படி முன்னே சென்று, போலீஸ் செக்கிங் உள்ள இடத்தை கூகிள் மேப்பிலேயே குறித்து ‘போலீஸ் இருப்பாங்க.. ஹெல்மெட் போடுங்க’ என டேக் செய்துள்ளார். அந்த வழியாக கூகிள் மேப் பார்த்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இந்த அறிவிப்பு காட்டும் என்பதால் அவர்கள் உடனடியாக ஹெல்மெட் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

 

இந்த கூகிள் மேப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதை தனது எக்ஸ் தளத்தில் ஷேர் செய்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, இதை போன்று போக்குவரத்து காவலர்கள் எந்தெந்த இடங்களில் செக்கிங் உள்ளது என்பதை கூகிள் மேப்பிலேயே குறித்து வைத்துவிட்டால் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வார்கள். ஹெல்மெட் அணியுங்கள் பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை-புதுச்சேரி, திருப்பதி ரயில் போக்குவரத்தில் மாற்றம்.. ரயில்வே துறை அறிவிப்பு..!