வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதால், தமிழகத்தின் சில பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, செப்டம்பர் 23ஆம் தேதி வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். அதை தொடர்ந்து, செப்டம்பர் 26ஆம் தேதி வடகிழக்கு வங்கக் கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இந்த காரணங்களால், தமிழகத்தில் செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நாட்களில் 7 முதல் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இரண்டு நாட்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.