வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்! தமிழகத்திற்கு கனமழையா?

Mahendran
வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (10:13 IST)
வங்கக் கடலில் அடுத்தடுத்து இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தமிழகம் உட்பட கடற்கரை மாநிலங்களில் கூடுதல் மழைக்கு வழிவகுக்கும் என்பதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, இந்த மாதத்திற்குள் இந்த இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும். அவை உருவாகிய பின்னரே எந்த திசையை நோக்கி நகரும் என்பதை துல்லியமாக கணிக்க முடியும்.
 
வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் பொதுவாகத் தமிழ்நாடு முதல் மேற்கு வங்கம் வரையிலான கடலோரப் பகுதிகளில் கனமழையை கொடுக்கும். அதேபோல், இந்த இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளாலும் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
தற்போது அவ்வப்போது சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் கூடுதல் மழைக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments